Please understand that this box is for emergencies only.
Call 9566990044/9677552277 when you need medical attention or have any health issues.
Rs. 100/ - as consultation fee to be paid at 9677442277.
A doctor will be appointed to advise you within a maximum of 10 minutes.
The doctor will explain what all the medications are and what diet you should follow.
If the same disease persists for the next 2 days, no consultation fee is required.
If an illness or health problem persists for more than 2 days, you should seek proper medical attention or you should come to the hospital in person.
Before using the drug, read the instructions carefully.
Do not take the medicine without the advice of a doctor for any reason.
Keep the DOCTOR BOX away from children (under 18).
Keep this box in a shady place and not in the sun or hot place.
Avoid touching the homeo pellete or tablets with your fingers on hand.
Gently shake the required pellete or tablets into the cap of container.
Use that as cup to gently place the medicine in your mouth.
For a baby, dilute the granules waith the help of spoon and administer them.
Do not consume water for 15 mins after taking homeopathic medicine.
Do not consume coffee while taking homeopathic medication.
Store all medicines in a place that young child cannot reach.
Drink 2 tumbler of hot water after medication.
Avoid tamarind, bitterguard, Agathikeerai (serbenia).
Avoid spicy food during vomiting & diarrhea.
Add buttermilk & curd to the food.
Prevent your body from dehydration. So drink plenty of fluids, foods rich in water content such as fruits, soups to be added in food.
Avoid too much of carbohydrates in food.
Take 20ml of virgin coconut oil + 2 tumbler luke warm on empty stomach in the morning.
Dark greens, rich fibre content vegtables, vegtables rich in water content to be added more to the diet.
Consume only naturally ripened Bananas & Papayas - Consume ABC (Apple, Beetroot, Carrot juice) & Dry fruit juice regularly.
Before consuming food, add fruits and salads to the diet.
Mix curd with hot rice and eat to stop diarrhea.
Consume hot veggie soups and salads.
CARROT -2, APPLE -1, BEETRROT - 1, peel and into small pieces. Grind them in mixie and blend it with little water and strain using a cloth (consume it 3 days in a week).
Muskmelon juice (weekly twice).
Pomegranate juice (weekly twice).
Have muskmelon or cucumber daily before every meal.
Drink 3 litres of water everyday.
DRY FRUITS JUICE: DATES-4, FIG-2, BADAM-4, PISTA-4, DRYGRAPES - 5, Soak minimum 1 hr until they soften. Add all soaked nuts & raisins and blend them well. Drink it without filter them.
If you are in low weight, Drink coconut milk (1/2 Coconut2 cardamom, palm jaggery - blend them in mixie and drink it after filtering).
Drink 3 litres of water everyday.
Take 1kg of apple pieces and lukewarm water, grind them in mixie and filter in cloth. Add 2 spoons of lucose in the juice and drink (Diabetic patients avoid glucose to the juice).
Drink owsadha kanji.
Drink hot veg soups.
Make kanji by using whole mung daals, lumin seeds, meethi seeds, salt along with add coconut milk and consume it
இந்த பெட்டி அவசர தேவைக்காக மட்டுமே என்பதை புரிந்து கொள்ளவும்.
உங்களுக்கு மருத்துவரின் கவனிப்பு தேவைப்படும்போது, ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் 9566990044/9677552277 ஐ அழைக்கவும்.
ஒரு முறை ஆலோசனைக்கு ரூ. 100/- ஆலோசனைக் கட்டணமாக 9677442277 என்ற எண்ணில் செலுத்தப்பட வேண்டும்.
அதிகபட்சமாக 10 நிமிடங்களில் உங்களுக்கு ஆலோசனை வழங்க மருத்துவர் நியமிக்கப்படுவார்.
அனைத்து மருந்துகளும் என்ன என்பதை மருத்துவர் விளக்குவார், மேலும் நீங்கள் பின்பற்ற வேண்டிய உணவுமுறை பற்றியும் விளக்குவார்.
அடுத்த 2 நாட்களுக்கு அதே நோய் தொடருமானால், அதற்கான ஆலோசனை கட்டணம் தேவையில்லை.
ஒரு நோய் அல்லது உடல்நலப் பிரச்சினை 2 நாட்களுக்கு மேல் தொடர்ந்தால், முறையான மருத்துவ கவனிப்பைப் பின்பற்ற வேண்டும் அல்லது நீங்கள் மருத்துவமனைக்கு நேரில் வர வேண்டும்.
மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன், வழிமுறைகளைப் கவனமாக படிக்கவும்.
எக்காரணம் கொண்டும் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள் மற்றும் குழந்தைகளிடமிருந்து (18 வயதுக்குட்பட்டவர்கள்) DOCTOR BOX-ஐ விலக்கி வைத்திருங்கள்.
இந்த பெட்டியை நிழல் பகுதியில் வைக்கவும், வெயிலிலோ, சூடான இடத்திலோ வைக்க கூடாது.
ஹோமியோ மருந்துகளை கையில் தொடக்கூடாது. மருந்து டப்பாவில் உள்ள மூடியில் கொட்டி தான் சாப்பிட வேண்டும்.
ஹோமியோ மருந்துகளை வாயில் போட்டு சப்பிதான் சாப்பிட வேண்டும்.
சிறு குழந்தைகளாக இருந்தால் சிறிது நீரில், கைபடாமல் கரைத்து கொடுக்கவும்.
ஹோமியோ மருந்து சாப்பிட்டு ¼ மணி நேரம் தண்ணீர் குடிக்க கூடாது.
ஹோமியோ மருந்து சாப்பிடும் போது காபி குடிக்க கூடாது.
வீட்டில் கற்பூரம் பயன்படுத்தக் கூடாது.
குழந்தைகள் எடுக்கும் இடத்தில் வைக்க கூடாது.
மருந்து சாப்பிட்டபின் 2 டம்ளர் சூடு நீர் குடிக்கவும்.
புளி, பாகற்காய், அகத்திக்கீரை, சேர்க்கக் கூடாது.
வயிற்றுபோக்கு, வாந்தி இருந்தால் காரம் சேர்க்க கூடாது.
மோர், தயிர் சேர்க்கவும்.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் கண்டிப்பாக ஜூஸ் / சூப் போன்றவைகளை அதிகம் சேர்க்கவும்.
அதிக மாவுச்சத்துள்ள பொருட்களை தவிர்க்கவும்.
சூடான சாதத்தில் தயிர் ஊற்றி சாப்பிடவும்.
வேகவைத்த காய்கறி சூப் (அ) சாலட் சாப்பிடவும்.
காலையில் வெறும் வயிற்றில் 20 ML தேங்காய் எண்ணெய் + 2 டம்ளர் சூடு நீர் குடிக்கவும்.
கீரை வகைகள், நீர்ச்சத்து, நார்ச்சத்து காய்கறிகள் அதிகம் எடுக்கவும்.
ABC JUICE, DRY FRUITS JUICE எடுத்துக்கொள்ளவும்.
பப்பாளி, வீட்டில் பழுக்கவைத்த வாழைப்பழம் எடுக்கவும்.
உணவுக்கு முன் கண்டிப்பாக பழங்கள் / சாலட் சேர்க்கவும்.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் கண்டிப்பாக அதிக ஜூஸ் / சூப் போன்றவைகளை அதிகம் சேர்க்கவும்.
அதிக மாவுச்சத்துள்ள பொருட்களை தவிர்க்கவும்.
கேரட் – 2, ஆப்பிள் – 1, பீட்ரூட்- 1, சிறிது சிறிதாக வெட்டி மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டி குடிக்கவும். (குறிப்பு: வாரத்தில் மூன்று நாள்)
முலாம்பழம் ஜூஸ் (வாரத்தில் இரண்டு நாள்).
மாதுளைப்பழம் ஜூஸ் (வாரத்தில் இரண்டு நாள்).
ஒவ்வொரு உணவுக்கு முன் வெள்ளரி (அ) முலாம்பழம் எடுக்கவும்.
தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தவும்.
பேரிட்சை – 4, அத்தி – 2, பாதாம் 4, பிஸ்தா - 4, உலர் திராட்சை – 5. இவை அனைத்தும் ஊற வைத்து (குறைந்தது 1மணி நேரம்) மிக்சியில் அரைத்து குடிக்கவும். (குறிப்பு: வடிகட்ட கூடாது)
எடை குறைவாக இருந்தால் தேங்காய் பால், (1/2 மூடி தேங்காய், 2 ஏலக்காய்,பனங்கருப்பட்டி சேர்த்து அரைத்து வடிகட்டி ) குடிக்கவும்.
ஒரு நாளைக்கு 3 லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும்.
1 கிலோ ஆப்பிளை சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸ்சியில் சிறிது சுடுதண்ணீர் சேர்த்து அரைத்து
மெல்லிய துணியில் வடிகட்டி ½ பாக்கெட் குளுகோஸ் சேர்த்து நன்கு கலந்து குடிக்கவும்.
(குறிப்பு: சர்க்கரை வியாதி இருப்பவர்கள் குளுகோஸை தவிர்க்கவும்).
A. கஞ்சி ஔஷதகஞ்சி குடிக்கவும்.
B. பாசிபயறு, அரிசி, சிறிது சீரகம், வெந்தயம், உப்பு சேர்த்து கஞ்சி வைத்து அதனுடன் தேங்காய் பால் (அ) தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடவும்.
வேகவைத்த காய்கறி சூப் குடிக்கவும்.